உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

மதுரை : மதுரை, அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.

மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்து, பல ஆண்டுக்கு பின் கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.


இதை தொடர்ந்து வரும் 9.12.22 ல் அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாள் சன்னிதியில் பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, ஆச்சார்யவரணம் நடைபெறுகிறது,


10.12.22 ல் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பிரதான ேஹாமம், கும்ப ஆராதனம், மகா சாந்தி ேஹாமம், மகாபூர்ணாகுதி, புண்யாகவாசனம் பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.

11.12.22 காலை 7.25 முதல் 8.45க்குள் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !