உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீப விழா: நாளை முகூர்த்தக்கால்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீப விழா: நாளை முகூர்த்தக்கால்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் கார்த்திகை தீபம் விழா:  நாளை, 02ம் தேதி வெள்ளிக்கிழமை, தசமி திதி, உத்ரட்டாதி நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் திருக்கார்த்திகை திருநாள் ஸ்தம்ப ஸ்தாபனம், (முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி) கார்த்திகை கோபுரம் எதிரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் திருக்கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து அவர்களின் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சி நிரல் :

கார்த்திகை மாதம் 22-ம் தேதி, 08-12-2022, வியாழக்கிழமை: இந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டு, சந்தனு மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் திருமஞ்சனம் கண்டருளி  பின் மூலஸ்தானம் சென்றடைகிறார்.


மாலை 6.00 மணிக்கு ஸ்ரீஉத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுப்பார்.

ஸ்ரீநம்பெருமாள் இரவு 8.00 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணியளவில்   பூந்தேரில் எழுந்தருளி கார்த்திகை கோபுரம் அருகில் சொக்கப்பானை கண்டருளுகிறார். பின்னர் தாயார் சன்னிதியில் திருவந்திக்காப்பு (திருஷ்டி கழித்தல்)கண்டருளி சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கு  ஸ்ரீமுகப்பட்டயம் வாசித்தல் நடைபெறும். (வரும் ஸ்ரீ வைகுந்த ஏகாதசியின் நிகழ்ச்சிக்காக நம் பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்குதல்) பின்னர் திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து மூலஸ்தானம் சென்றடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !