திருவண்ணாமலை கார்த்திகை தீபத் விழா : ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1406 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் ராஜகோபுர முன் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.