பேரூர் திருமடத்தில் நூல் வெளியீட்டு விழா
ADDED :1138 days ago
பேரூர்: பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், சோணசைல மாலை என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூராதீனம் தவத்திரு இராமலிங்க அடிகளார், குரு வழிபாடு நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், திருவண்ணாமலை ஸ்தலத்தின் சிறப்புகள் குறித்து எழுதிய, சோணசைல மாலை என்ற பாடல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், திருமடத்தின் தம்பிரான் சுவாமிகள் நூலை வெளியிட, கல்லூரியின் தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகத்தின் நூலகர் அபிராமி நூலை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.