கால காலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1090 days ago
கோவில்பாளையம்: காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நேற்று நடந்தது. கோவில் பாளையத்தில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த, எமதர்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கருணாகரவல்லி அம்மனுடன், சிவலிங்க திருமேனியாக மூலஸ்தானம் உள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, கோவை, சிவமோடு சிவமாக குழுவின் சார்பில், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாணிக்கவாசகப் பெருமானின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 51 அத்தியாயங்களை கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் முழுமையாக பாடினர் இதில் குழுவின் தலைவி கலைவாணி உள்பட 50 சிவனடியார்கள் பங்கேற்றனர்.