காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 1.140 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கை
ADDED :1252 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தமிழகத்தில் சென்னையை சேர்ந்த பாலாஜி என்ற பக்தர் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை 1.140 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினர் .இவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு முன்னதாக சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையாரையும் தரிசனம் செய்தவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.