கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா
ADDED :1042 days ago
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, நேற்று காலை 04:00 மணிக்கு நடைதிறப்பு திறக்கப்பட்டு, காலை 04:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடைபெற்றது. காலை 05:30 மணிக்கு பரணிதீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இரவு 07:00 மணிக்கு மேல் மகா தீபம் (சொக்கப்பனை) ஏற்றுதல் நடைபெற்று பின்னர் ரிஷப வாகனத்தில் கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.