ஆண்டிபாளையம் நாகசக்தி அம்மன் கோவில் விழா
ADDED :1035 days ago
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆண்டிபாளையம் நாகசக்தி அம்மன் கோவிலில், ஆண்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி, நெகமம், ஆண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற நாகசக்தி அம்மன் கோவிலில், 28ம் ஆண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், குங்குமம், கனி வகைகள் உள்ளிட்ட அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.