சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்ப பூஜை
ADDED :1036 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், சக்தியை அதிகரிப்பதற்காக பெண்கள் கும்ப பூஜை நடத்தினர். முன்னதாக மூலவருக்கு ஆராதனைகளுடன் துவங்கிய விழாவில், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கும்பங்களில் 18 புண்ணிய தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள், கும்பங்கள் அமைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மூலவர், உற்சவர், பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அர்ச்சகர் இளையராஜா தலைமையிலான குழுவினர், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.