காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1102 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில ( ஹைகோர்ட்) உயர் நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனராவ் இன்று குடும்பத்தார் ரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் மேலும் கோயில் சாமி பட்டத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் கோயில் அதிகாரிகள் வழங்கினர்.