வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1285 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்காக குண்டூரை சேர்ந்த ராமினேனி. துர்கா ஜெயராம் குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி இடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்ததை இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோயில் சார்பில் சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.