உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதர் கோவிலுக்குள் செப்.,1 முதல் மொபைல் போன் எடுத்த செல்ல தடை

காஞ்சி வரதர் கோவிலுக்குள் செப்.,1 முதல் மொபைல் போன் எடுத்த செல்ல தடை

காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறிநிலையத் துறையின் உத்தரவுப்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள், செப்., 1 முதல், மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்குள், மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல, செப்., 1 முதல், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரப்பூர்வ தடை விதித்துள்ளது. இதற்காக, கோவில்களின் நுழைவாயில்களில், மொபைல் போன், கேமராக்களை பாதுகாப்பாக வைக்க லாக்கர்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவுப்படி, செப்., 1ம் தேதி முதல் கோவிலுக்குள், மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் த ங்களது மொபைல் போன்களை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தும் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்து விட்டு, தரிசனத்திற்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மொபைல் போன்களை ஒப்படைக்கும் மற்றும் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து பக்தர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட உள்ளது என, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !