அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 21ல் வரலட்சுமி ஹோமம்
ADDED :3 hours ago
பெசன்ட் நகர்: வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் குபேர, ஸ்ரீ சுக்த சிறப்பு ஹோமம் நடத்தப் படுகிறது.
சென்னை, பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வரும் 21ம் தேதி சிறப்பு ஹோமம் நடக்க உள்ளது. காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனமும், ஆராதனையும் நடக்கின்றன.
தொடர்ந்து காலை 7:30 மணிக்கு குபேர, ஸ்ரீசுத்த ஹோமங்கள், சிறப்பு திருமஞ்சனம் நடக்கின்றன. மாலை சிறப்பு புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
சிறப்பு ஹோமத்தில் பூஜித்த அஷ்ட மங்கள பொருட்களுடன் கூடிய நோன்பு சரடு, பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.