அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயில் உற்ஸவ விழா கொடியேற்றம்
ADDED :1112 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயில் 50வது பொன்விழா ஆண்டு உற்ஸவ பெருவிழா கொடியேற்றம் நடந்தது. டிச., 14ல் காலை 9:30க்கு 108 கோ பூஜை, 15.,ல் கலச பூஜை, இரவு 7:00 மணிக்கு பக்தி உணர்வை காத்து வளர்ப்பவர்கள் ஆண்களே, பெண்களே என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், 16.,ல் ஐயப்பனை வளர்த்த பந்தள மன்னர் பரம்பரை வம்சாவழியினரின் சிறப்பு அருளாசி, இரவு நாட்டுப்புற மக்கள் இசை நிகழ்ச்சி, 18ல் மாலை திருவிளக்கு பூஜை, டிச.,19ல் சிவ வாத்தியம், அன்னதானம், பூ பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், பக்தி பணி மற்றும் விழாக் குழுவினர் செய்கின்றனர்.