உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மோசமான காலநிலை: மழையில் பரிதவித்த பக்தர்கள்

சபரிமலையில் மோசமான காலநிலை: மழையில் பரிதவித்த பக்தர்கள்

சபரிமலை: தொடர் மழையால் சபரி மலையில் மோசமான காலநிலை நிலவுகிறது. மழையில் நனைந்து பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.

சபரிமலையில் கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரையில் பக்தர்கள் மழையில் நனைந்தபடி கியூவில் நிற்கின்றனர். அதன் பின்னர் 18 படிகளில் ஏறும் போதும், சன்னதி அருகே வரிசையில் நிற்கும் போதும் மழையில் நனைகின்றனர். நேற்று அதிகாலை தொடங்கிய மழை மதியம் 12:00 மணி வரை நீடித்தது. மாலையில் மீண்டும் மழை பெய்தது. நிலக்கல் - பம்பை ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டது. நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இன்று 77 ஆயிரத்து 216 பேரும், நாளை 64 ஆயிரத்து 617 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !