மருதமலையில் குவியும் சபரிமலை பக்தர்கள்
ADDED :1113 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலிலுக்கு, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதம் துழங்கியது முதல், கோவையில், ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், எல்லா நாட்களும் மருதமலையில் காணும் இடமெல்லாம் ஐயப்ப பக்தர்கள் உள்ளனர். ஐயப்ப பக்தர்களின் வருகையால், மருதமலை அடிவாரத்தில் உள்ள அனைத்து கடைகளில் வியாபாரங்களும் களைகட்டி வருகிறது.