உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி கோயில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்

தாண்டிக்குடி கோயில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்

தாண்டிக்குடி , தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழா மூன்று நாள் நடந்தது. விழாவில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் போது சேத்தாண்டி வேடம், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல்,கிடா வெட்டுதல், முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டு செய்தல் ஆகிய நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !