காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேக பூஜை
ADDED :1046 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், 108 சங்க அபிஷேக பூஜை நடந்தது. காரமடையில் மிகவும் பழமையான, லோகநாயகி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத நான்காவது சோமவார பூஜை நேற்று நடந்தது. காலையில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை, சாயரச்ச பூஜை, கணபதி பூஜை, கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு, 108 திரவியங்களால் திரவியாதி ஹோமங்கள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது. ருத்ர ஜெபம் அடுத்து, 108 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. பின் மலர் அலங்காரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையை அஸ்வின் சிவாச்சாரியார் நடத்தினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.