மார்கழி பிறப்பு: வெள்ளி கவச அலங்காரத்தில் அண்ணாமலையார் அருள்பாலிப்பு
ADDED :1105 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் (உற்சவமூர்த்திக்கு) வெள்ளி கலசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருமுறை கழகம் சார்பில், திருவாசகம் மற்றும் திருமுறை படித்தபடி சிவ பக்தர்கள் மாடவீதி சுற்றி வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.