வெற்றி விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1363 days ago
நிலக்கோட்டை: ஜெயநாயக்கன்பட்டி வெற்றி விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை துவங்கி வாஸ்து சாந்தி, விக்ரக பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை புன்னியாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, மகாதேவ ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து புனித தீர்த்தங்கள் கோயிலை வலம் வந்து கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை நிலக்கோட்டை ராஜாமணி சிவாச்சாரியார் நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது.