உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுர் மாத வழிபாடு

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுர் மாத வழிபாடு

மயிலாடுதுறை: மார்கழி மாதம் இன்று தொடங்கியதை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாதப்பிறப்பு வழிபாட்டை தொடங்கினார். மார்கழி மாதம் 30 நாட்களும் தினசரி ஒரு கோயிலில் வழிபாடு மேற்கொள்வதை தருமபுரம் ஆதீனம் வழக்கமாக கொண்டுள்ளார். அவகையில் இன்று மாயூரநாதர் கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பசு, குதிரை மற்றும் ஒட்டகம் ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, கோயிலில் மாயூநாதர் சன்னதி, அபயாம்பிகை சன்னதி மற்றும் சுப்பிரமணியர் குமார கட்டளையில் ஆதீனம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து குமரகட்டளை மடத்தில் அவர் கொலு காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !