சித்தர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்கருப்பர் சுவாமி குருபூஜை
ADDED :1040 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரையில் இப்ராஹிம் ஒலியுல்லாவின் சிஷ்யராக
முத்துக்கருப்பன் இருந்துள்ளார். இவர் மக்களுக்கு பல் நற்பணிகள் செய்ததோடு சித்தர் ஆக பல அரிய செயல்களை செய்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பகுதியினர் இவரை வழிப்பட்ட னர். இவர் மறைவிற்குப் பிறகு கொங்கிவயலில் இவருக்காக ஸ்ரீலஸ்ரீ முத்துக்கருப்பன் சுவாமி கோவில் கட்டி , ஆண்டவர்கள் என வழிப்பட்டு வருகின்றனர். நேற்று இவரது 87 வது குருபூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பட அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடந்தன. பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தேவகோட்டை நகர் உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். 2ஆயிரம் கிலோ அரிசியில் சமைக்க ப்பட்ட அறுசுவை விருந்து நடந்தது.