திருப்பரங்குன்றத்து கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம்
ADDED :1041 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்ததால் சுவாமி தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் ஆனது.
கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன், முருக பக்தர்கள் ஏராளமான ஒரு மாலை அணிவித்து கோயிலுக்கு வருவர். வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் இரவில் திருப்பரங்குன்றத்தில் மண்டபங்களில் தங்கி அதிகாலை சுவாமி தரிசனம் முடித்து செல்வர். நேற்று உள்ளூர், வெளியூர் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.