மானாமதுரை கோயிலில் இன்று ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா
ADDED :1107 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பர வீதி வுலாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் வருடந்தோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று சிவபெருமான் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமிகள் ரிஷப வாகனத்தில் சப்பங்களுக்கு எழுந்தருளிய பின்னர் சப்பரங்கள் பாகவத் அக்ரஹாரம் வழியாக மெயின் பஜார்,4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்தடைந்ததும் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.