ஐயப்பன் கோயிலுக்கு வாஸ்து பூஜை
ADDED :1035 days ago
எழுமலை: எழுமலை பொட்டல் காளியம்மன் கோயில் அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் புதிதாக ஐயப்பன் கோயில் கட்டுவதற்கான வாஸ்து பூஜைகள் நடந்து வருகிறது. டிச.17 காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. எழுமலை வட்டார பகுதிகளில் உள்ள வனதேவதைகள், குலதேவதைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று சுகர்தஹோமம், பகவதி சேவா பூஜைகள் நடைபெற்றது. இன்று டிச.19 காலையில் திலக ஹோமம், சாயுஜியா பூஜை, ஐயப்பன் பூஜை, பரிகார பிரயசித்த வழிபாடுகள் நடக்க உள்ளது.