பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் நலன் வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :1101 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி, முருகன் மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது,அனுக்ஞை, ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மலைக் கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.