தர்மசாஸ்தா கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்
ADDED :1102 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயில் 50வது பொன்விழா ஆண்டு உற்ஸவ விழா டிச.,11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச.,14ல் 108 கோ பூஜை, 15ல் கலச பூஜை, 16.,ல் ஐயப்பனை வளர்த்த பந்தள மன்னர் பரம்பரை வம்சாவளியினர் சிறப்பு அருளாசி வழங்கினர். 18.,ல் திருவிளக்கு பூஜையும், 19.,ல் அன்னதானத்தை தொடர்ந்து இரவு பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. சுவாமி முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், பக்தி பணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்