வாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1028 days ago
அவிநாசி: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. சேவூரில் அறம் வளர்ந்த நாயகி உடனமர் ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஆருத்ரா தரிசனம், நடராஜருக்கு ஆறு அபிஷேகம், சஷ்டி, கிருத்திகை, பைரவாஷ்டமி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. 32 வகையான திரவிய அபிஷேகங்கள், மஹா தீபாரதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் குட்டகம், கூலே கவுண்டனபுதூர் மொக்கணீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.