உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து உற்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம், கபாய் சட்டை, ரத்தின அபய ஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, உள்ளிட்ட திருஆபரணங்கள் தரித்து, மூலஸ்தானத்தில் இருந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !