சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ‘பகல் பத்து’ உற்சவம்
ADDED :1091 days ago
சேலம்: அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் ‘பகல் பத்து’ உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று ‘கிடந்தவாறு எழுந்து பேசும் கேசவன்’ அலங்காரத்தில் சவுந்தரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.