உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தரின் சேவையை பாராட்டி தங்க அங்கி சுமக்கும் வாய்ப்பு

பக்தரின் சேவையை பாராட்டி தங்க அங்கி சுமக்கும் வாய்ப்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த பக்தருக்கு அவரது சேவையை பாராட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி உள்ள பெட்டியை சுமக்கும் வாய்ப்பு கிட்டியது.

பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா 55. இவர் 25 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று மண்டல, மகா, பாத பூஜை நாட்களில் அங்குள்ள அவசரகால உதவி பிரிவில் சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். உடல் சுகவீனம் அடைந்தவர்கள், இறந்தவர்களை அவரவர் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். இவரது சேவையை பாராட்டி சபரிமலை சன்னிதானத்தைச் சேர்ந்த குழுவினர் பம்பை நதியிலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு, சுவாமிக்கு அணிவிக்கும் தங்க அங்கி உள்ள பெட்டியை சுமக்கும் வாய்ப்பை வழங்கினர். இது குறித்து இராமையா கூறுகையில் தங்க அங்கியை சுமந்தது எனக்கு பெருமை. ஒவ்வொரு பக்தர்களும் பிரதிபலன் பார்க்காமல் சேவையாற்றினால் அவர்களுக்கும் இப்பேறு கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !