காளஹஸ்தி சிவன் கோயிலில் 2023 புதிய காலண்டர் வெளியீடு
ADDED :1025 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று( வியாழக்கிழமை)கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வரும் ஆங்கில புத்தாண்டின் 2023 புதிய ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் புதிய காலண்டர்களை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு மற்றும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி கே வி சாகர் பாபு தலைமையில் வெளியிட்டனர் . மேலும் இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி யின் மகன் ஆகார்ஷ் ரெட்டி கலந்து கொண்டனர்.