உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் பகல் பத்து எட்டாம் திருநாள்: நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம் பகல் பத்து எட்டாம் திருநாள்: நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பகல் பத்து எட்டாம் திருநாளான இன்று (30ம்தேதி) நம்பெருமாள் முத்து சார்க் கொண்டை,  மகர கர்ண பத்ரம், மார்பில் பருத்தி பூ பதக்கம், அதன் மேல் நாச்சியார் பதக்கம்,  சந்திர கலை , மகரி,, அடுக்கு பதக்கங்கள்,  வைர  அபயஹஸ்தத்துடன், பச்சை பட்டு வஸ்திரம்  அணிந்து, 2 வட பெரிய முத்து சரம், தங்கப் பூண் பவள மாலை, சிகப்பு கல் 3  அடுக்கு மகர  கண்டிகை   சாற்றி, பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !