காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா மாநில மகளிர் ஆணையர் தரிசனம்
ADDED :1270 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கர்நாடகா மாநில மகளிர் ஆணைய தலைவி பிரமீளா நாயுடு குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலூ இவரை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தார். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்மையார்களின் படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்.