விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4789 days ago
விக்கிரவாண்டி: பாப்பனப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பாப்பனப்பட்டில் உள்ள பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 31ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மூன்று கால யாக பூஜைகள் நடந்து நேற்று காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 8.10 மணிக்கு கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது கருட பகவான் காட்சியளித்ததை கண்ட பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வணங்கினர்.விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை வீரபத்திரன், ஊராட்சி தலைவி பாக்கியலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.