உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்காததால் ஏமாற்றம்

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்காததால் ஏமாற்றம்

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கப்படாதது பக்தர்களை ஏமற்றமடைய செய்துள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இத்திட்டம் 468 கோவிலில்களில், நடைமுறையில் உள்ள நிலையில், மேலும் 50 கோவில்களுக்கு தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது தேனபிஷேகம் செய்யும்போது, சிவபார்வதியை ஒளி வடிவில் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும். இதனை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அன்னதான திட்டம் துவக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள பட்டியலிலும், இக்கோவில் இடம்பெறாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !