உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பில்ராம்பட்டு கோவில் கும்பாபிஷேக விழா

பில்ராம்பட்டு கோவில் கும்பாபிஷேக விழா

திருக்கோவிலூர்: சு.பில்ராம்பட்டு திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டு, அப்பனந்தலில் உள்ள திரவுபதியம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், விநாயகர், பாலமுருகர் கோவில்கள் தற்போது புதுப்பிக்கப் பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு புண்யாஹம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ஹோமங்களும், மஹாபூர்ணாஹிதியும் நடந்தது.இதன் பின் கடம் புறப்பாடாகி காலை 9 மணிக்கு விநாயகர், எல்லை பிடாரியம்மன், பாலமுருகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மூலகலசங்களுக்கும், திரவுபதியம்மன் மூலகலசம் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா எற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !