உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடி அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் கண் திறப்பு பூஜை

வாழப்பாடி அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் கண் திறப்பு பூஜை

வாழப்பாடி: வாழப்பாடி, அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் கண் திறப்பு, சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. வாழப்பாடி, அக்ரஹாரத்தில், கடம்பூர் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில், கோவில் வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.அதில், கோவில் வளாகத்தில் இருந்து குதிரை வாகனம் மற்றும் ஸ்வாமி சிலைகள், கோவில் சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்தது. அதனையடுத்து, கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஸ்வாமிக்கு கண்திறப்பு, சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !