உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர், வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்

ராகவேந்திரர், வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவில் மற்றும் மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் ஆங்கில புத்தாண்டில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரியில் மகான் ராகவேந்திரர் பிறந்த இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டு சுவேத நதி தீர்த்தத்துடன், மந்தராலய மரபின் படி பல்வேறு நறுமணப்பொருட்கள் மற்றும் திரவங்களை கொண்டு அபிேஷக ஆராதனை செய்து வருகின்றனர். நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் இருந்த பக்தர்கள் அதிகளவில் வரத்து துவங்கினர். ரகு மற்றும் ரமேஷ் ஆச்சாரியர்கள் சிறப்பு அபிேஷகம் நடத்தினர். பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மருதுாரில் வள்ளலார் அவதார இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அகவற்பா பாடியதுடன் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை முழக்கமிட்டனர். பின்னர் தியானம் செய்தனர். பக்தர்களுக்கு சுடு தண்ணீர், நாட்டு சக்கரை மற்றும் தேங்காய் பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !