உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வதிஷ்டபுரம் பெருமாள் கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

வதிஷ்டபுரம் பெருமாள் கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள், இன்று மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திட்டக்குடி வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, கடந்த டிச.23ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. பகல்பத்து எனப்படும் திருமொழித்திருநாளின் ஒன்பதாம் நாளான இன்று, பெருமாள் மோகினிஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை அதிகாலை 4மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பட்டாச்சார்யார் ராகவன், வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார் மற்றும் உபயதாரர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !