உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கில புத்தாண்டு : கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு : கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி கோவில்களில், ஆங்கில புத்தாண்டை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள், வேதாந்தவல்லி சமேத சுகாசனபெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொழுதூர் மதுராந்தகசோளீஸ்வரர் கோவில், வெங்கனூர் கம்ப பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !