அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு : பக்தர்கள் தரிசனம்
ADDED :1086 days ago
திருவண்ணாமலை : தமிழகத்திலேயே சிவஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே ஏகாதேசி முன்னிட்டு, வைகுண்ட வாயில் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பாமா, ருக்மணி சாமேதராய் வேணுகோபால் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் வைகுண்ட வாயில் திறப்பில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.