பரமக்குடியில் நடராஜர் ஆனந்த தாண்டவம்
ADDED :1039 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் ஆனந்த தாண்டவம் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில், சிவகாமிசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் அருள்பாளிக்கிறார். இங்கு உற்சவர் பச்சை சாத்தி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மகா மண்டபத்தில் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி, மேளதாளம் முழங்க நடந்தது. பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க கண்டுகளித்தனர். தொடர்ந்து நாளை காலை 5:00 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.