உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மனோன்மணி உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை, 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 9:00 லிருந்து, 10:30 மணி வரை, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், மனோன்மணி அம்மையாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க, சீர் வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, அர்ச்சகர் வேலவன் தலைமையில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !