பெருமாள் கோவிலில் தூய்மைபடுத்தும் பணி
ADDED :4785 days ago
சின்னசேலம்:சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 8ம் தேதி உறியடி திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை சுவாமி பாலகிருஷ்ணன் ஊர்வலமும், இரவு ருக்மணி, பாமா உடன் கிருஷ்ணர் வீதியுலாவும் நடக்கிறது. இதனையொட்டி கோவிலை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக உறியடி நடக்கும் தூண்கள் மற்றும் 13 நாயன்மார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியும் துவங்கியது.