உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கடையநல்லூர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மேலக்கடையநல்லூர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கடையநல்லூர்: மேலக்கடையநல்லூர் செல்வ விநாயகர், வடக்குத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.மேலக்கடையநல்லூர் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்வவிநாயகர், வடக்குத்தியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை முதல் ஆறாம் கால யாகசாலை பூஜை வரை நடந்தது.மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாகசாலையில் இருந்து திருக்குடம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து கோபுரம், செல்வவிநாயகர், வடக்குத்தியம்மனுக்கு பக்தர்களின் கோஷம் முழங்கிட மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை நயினாரகரம் பிதம ஆசிரதம் ராமசாமி (எ) சேஷன், கடையநல்லூர் கருமாரியம்மன் கோயில் அர்ச்சகர் முத்துக்குமார்பட்டர் நடத்தி வைத்தனர். விழாவில் சேனைத்தலைவர் சமுதாய தலைவர் முத்தையா சேனையர், செயலாளர் கணேசன், பொருளாளர் தமிழ்செல்வன், திருப்பணி கும்பாபிஷேக விழாக் கமிட்டி தலைவர் பிச்சையா, செயலாளர் இசக்கி, பொருளாளர் ராமையா, துணை செயலாளர் சுப்பையா, பரமசிவம், அண்ணாமலைசாமி நாடார், மாரிப்பாண்டியன், முருகையா, ஏ.கே.சுப்பையா, வெங்கடேஷ்பட்டர், ஆறுமுகம், துரை, முருகையா, செல்லப்பா, தேவராஜ், பேச்சிமுத்து, கார்த்தி, மாரிமுத்து, மாரியப்பன், சண்முகவேல் மற்றும் மேலக்கடையநல்லூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உட்பட தென்காசி, ஆய்க்குடி, சுரண்டை, செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !