பழவூர் இசக்கியம்மன் கோயிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம்
திருநெல்வேலி:நான்குநேரியை அடுத்த சங்கனான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 12 ம் தேதி காலை நடக்கிறது. நான்குநேரியை அடுத்த சங்கனான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கஜபூஜை மற்றும் கோ பூஜையும், 10.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.மாலை 5 மணிக்கு சங்கனான்குளம் அன்ன முத்துலட்சுமி அம்மன் கோயில் வழிபாடு தீர்த்த சிறப்பு பூஜை, தீர்த்தம் ஊர் சுற்றி வலம் வருதல் மற்றும் ஆலய பிரவேசம் போன்றவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பாலிகை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கும்ப அலங்கார பூஜை, முதற்கால யாகசாலை பிரவேசம், திரவிய ஹோமம் மற்றும் மூலிகை ஹோமம் நடக்கிறது.
இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், 10 மணிக்கு யந்திர ஸ்தாபனம், சிலைகள் நிலை நிறுத்துதலும் நடக்கிறது.வரும் 12 ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை, மூலமந்திர ஹோமம், திரவிய ஹோமம் மற்றும் மூலிகை ஹோமமும், 9.05 மணிக்கு ஸ்பர்ஷாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடக்கிறது.காலை 9.40 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. 11.15 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.விழாவில் சங்கனான்குளம் பகுதி தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை சங்கனான்குளம், கீழவீடு ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்கமிட்டியார் செய்து வருகின்றனர்.