திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நிறைவு
ADDED :1074 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று நிறைவடைந்தது. டிச. 7ல் துவங்கிய விழாவில் நேற்று வரை தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு கருமுடி சாத்துப்படி செய்து மூலிகை எண்ணெய் தேய்த்தல், வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல்துலக்குதல், கண்ணாடி பார்த்தல் நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. நேற்று இந்நிகழ்ச்சிகள் நிறைவடைந்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தார். கொரோனா தடை உத்தரவால் கடந்த இரண்டு ஆண்டுகள் உள்திருவிழாவாக நடத்தப்பட்டது.