உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை விழா

நாகர்கோவில்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா நாகர் கோவில் வடிவீஸ்வரம் ராகவேந்திரர் கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக தென்கரை மகாதேவன் கலந்து கொண்டு தியாகராஜ சுவாமிகளின் பல்வேறு கீர்த்தனைகள் பாடினார். இதில் இசை கலைஞர்கள் ராமசேஷன், ராகவேந்திரர் அறக்கட்டளை மகளிர் அணி தலைவி சாந்தா சுப்ரமண்யன், மங்களம், சலஜா, ரேவதி, கலா, பரமேஸ்வரி, ராமலெட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வடிவீஸ்வரம் ராகவேந்திரர் அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன் செய்திருந்தார். இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !