ஐயப்ப பக்தர்களுக்கு பிஸ்கட், பழங்கள் வழங்கி வழி அனுப்பிய கவுன்சிலர்
ADDED :1070 days ago
கீழக்கரை: கீழக்கரை நாராயண சாமி கோயிலில் நேற்று ஐயப்ப பக்தர்கள் 120 பேர் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை செல்வதற்காக பஸ்ஸில் ஏறினர். அப்போது கீழக்கரை 14வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஹாஜா சுஐபு 35, என்பவர் சபரிமலை யாத்திரை செல்லும் 120 ஐயப்ப பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாக்கெட், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க யாத்திரை துவங்கினர்.
இது குறித்து அவர் கூறியதாவது; மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஐயப்ப பக்தர்களுக்கு என்னால் என்ற சிறிய பங்களிப்பைச் செய்கிறேன். சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை எப்பொழுதும் நமக்கு நண்பர்களாக விளங்கும் என்றார்.